தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'என் அப்பா அம்மா செய்த புண்ணியம்' - இளையராஜா குறித்து மனமுருகிய சூரி! - vijay sethupathi

நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் 'என் அப்பா அம்மா செய்த புண்ணியத்தால் இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்தது' என மனமுருகி பதிவிட்டுள்ளார்.

’என் அப்பா அம்மா செய்த புண்ணியம்’ - இளையராஜா குறித்து மனமுருகிய சூரி
’என் அப்பா அம்மா செய்த புண்ணியம்’ - இளையராஜா குறித்து மனமுருகிய சூரி

By

Published : Feb 10, 2023, 12:58 PM IST

சென்னை: நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் ஆரம்பக் காலத்தில் சிறிய வேடங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு. இப்படத்தில் இடம்பெற்ற ’பரோட்டா காமெடி’ மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகராகத் தமிழ் திரைத்திறையில் எல்லோருக்கும் அறிமுகமான 'பரோட்டா சூரி' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனியிடம் பிடித்தார். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சூரியைக் கதாநாயகனாக மாற்றியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் விடுதலை படத்தில் கதை நாயகனாகச் சூரி நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வெற்றிமாறன் கொடுப்பதால் விடுதலை படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இம்முறை முதல் முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனால் இந்த கூட்டணி மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் அனன்யா பட் இப்பாடலைப் பாடியுள்ளனர். சுகா எழுதியுள்ள ’ஒன்னோடு நடந்தா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில் என் அப்பா அம்மா செய்த புண்ணியம், என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பாகும். இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த பதிவில், சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details