தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உண்மை சம்பங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள “தி மெட்ராஸ் மர்டர்” - தி மெட்ராஸ் மர்டர்

இயக்குநர் சூரியபிரதாப் S எழுதி இயக்கத்தில் Sonyliv தளத்தின் அடுத்த அதிரடி இணைய தொடராக “தி மெட்ராஸ் மர்டர்” தொடர் உருவாகி வருகிறது.

Sonyliv தளத்தின் அடுத்த அதிரடி இணைய தொடர்
Sonyliv தளத்தின் அடுத்த அதிரடி இணைய தொடர்

By

Published : Jul 25, 2022, 9:30 PM IST

SonyLIV தளம் தனது அடுத்த அதிரடி இணைய தொடரை அறிவித்துள்ளது. 1940 களின் பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது.

சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட, பிரபல மஞ்சள் பத்திரிகையாளரின் கொலையைச் சுற்றி நடந்த அறியப்படாத சதிகளையும் மர்மங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும்.

“தி மெட்ராஸ் மர்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை சூரியபிரதாப் S எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குநர் விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை Big Print Pictures பேனரின் கீழ் IB கார்த்திகேயன் தயாரிக்கிறார்.

இந்த தொடர் குறித்து AL விஜய் கூறுகையில், “மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான “தி மெட்ராஸ் மர்டர்” தொடரில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, எங்கள் முழு மூச்சுடன் உழைக்கும். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள்”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஷாலின் காயம் குறித்து கேட்டறிந்த விஜய்!

ABOUT THE AUTHOR

...view details