ஹரியானா(ஹிசார்):மறைந்த நடிகை சோனாலி போகட் வழக்கு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவரின் கடைசி படமான ’ப்ரேர்னா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நரேஷ் தண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சோனாலி மேடம் நடித்துள்ளார். இதில், அவர் எப்படி மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கையளித்து அவர்களை எப்போதும் முன் செல்ல வைக்கிறார் என்பது தான் கதை. இது ஒரு நல்ல ஊக்கப்படுத்தும் திரைப்படமாகத் தயாராகியுள்ளது” என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டரை சோனாலி போகட்டின் மகள் வெளியிட்டார். மேலும், தான் இந்தப் படத்தின் ஓர் பாடல் காட்சியை சோனாலி போகட்டின் மகளை வைத்து படமெடுக்கவுள்ளதாகவும் ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற நாள்களில் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், கூடிய விரைவில் சோனாலி போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓர் திரைப்படத்தைத் தான் இயக்கவிருப்பதாகவும் இயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “சோனாலியைக் கொலை செய்தவர் யார் என்பது தெரிந்தவுடன் நான் சோனாலியின் பெயரிலேயே அவரின் வாழ்வைப் படமாக எடுப்பேன்” என்றார்.
மேலும், நேற்று ஹரியானாவின் முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், சோனாலி போகட்டின் மரண வழக்கில் அன்னாரின் குடும்ப நபர்களுக்கு தேவைப்பட்டால் சிபிஐ ஆய்வு செய்வதற்குக் கூட தான் ஏற்பாடு செய்துதருவதாகத் தெரிவித்துள்ளார். நடிகை சோனாலி போகத் கடந்த மாதம் ஆக.23 அன்று கோவாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது உடற்கூராய்வு முடிவுகளில் அன்னாரின் சடலத்தில் பலத்த காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை சோனாலி போகத்2020பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், இவர் கடந்த 2019 ஹரியானா தேர்தலில் பாஜக வேட்பாளராக நின்று காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிசோனியிடம் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உண்டு...!' - சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர்