தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் வெப் சீரிஸ் "வதந்தி" - டிச.2இல் வெளியீடு! - எஸ்ஜே சூர்யா

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள முதல் வெப் சீரிஸான "வதந்தி", டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Rumour
Rumour

By

Published : Nov 17, 2022, 6:20 PM IST

சென்னை: இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்த பன்முக கலைஞரான எஸ்.ஜே.சூர்யா, முதல்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸை, வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின்கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றனர்.

இதில் சஞ்சனா, லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸாக இது வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப் சீரிஸுக்கு "வதந்தி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் வெப் சீரிஸ், டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா காவல்துறை அலுவலராக நடித்துள்ளார். பொய்களால் ஆன ஒரு வலையில் சிக்கியுள்ள எஸ்.ஜே.சூர்யா, தன்னைச் சுற்றி நடப்பதை கண்டுபிடிப்பதுதான் கதைக்களம் என்று தெரிகிறது.

"வதந்தி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, "இது என்னைப் பற்றிய 'வதந்தி' இல்லை. இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். ஃபர்ஸ்ட் லுக் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நவ.25-ல் வெளியாகும் சசிகுமாரின் 'காரி' படம்!

ABOUT THE AUTHOR

...view details