தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’சிவி’ படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 22 வெளியாகிறது - sivi movie

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திகில் திரைப்படமான ‘சிவி’ படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.

90's கிட்ஸ்களின் ஃபவரேட் திகில் படமான ’சிவி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது
90's கிட்ஸ்களின் ஃபவரேட் திகில் படமான ’சிவி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது

By

Published : Jul 13, 2022, 3:51 PM IST

கடந்த 2007 ஆம் ஆண்டு கே.ஆர் செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ”சிவி”. வித்தியாசமாக ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது 15 ஆண்டுக்ளுக்கு பின்னர் இதன் 2 ஆம் பாகம் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய கே.ஆர் செந்தில்நாதன் இயக்கத்தில், துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தினை மாயோன் திரைப்படத்தை வெளியிட்ட ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார். இதுவரை சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில படத்துக்கு நிகராக உருவாகியுள்ள திரைப்படம் சிவி2!

இப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, சரண் ராஜ் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் ஜூலை 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:10 years of 'Billa 2' - தன்னை தானே செதுக்கியவன்!

ABOUT THE AUTHOR

...view details