தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் அயலான் பட அப்டேட்! - Kollywood news

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் குறித்த முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது.

Sivakarthikeyans Ayalan movie update is releasing tomorrow
Sivakarthikeyans Ayalan movie update is releasing tomorrow

By

Published : Apr 23, 2023, 7:52 PM IST

சென்னை:சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ரவிக்குமார், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ் பெற்றவர் ஆவார். 'அயலான்' திரைப்படமே இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குநரின் முந்தைய படத்தைப் போன்றே, இத்திரைப்படமும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்களின் பிரமாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
"அயலான்" திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்குப் போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள்
உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.
‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நில ஒருங்கிணைப்புச் சிறப்பு சட்டத்தைத் திரும்பப் பெறுக - பூவுலகின் நண்பர்கள் குழு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details