நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இருவர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது சர்ச்சை வெடித்து வந்தது.
நடிகர் அருண் விஜய் மகன் ஆர்னவ் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் அப்படி இருக்கையில் தொடரும் அந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் மகன் அர்னவ்விற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி. ஓ மை டாக் படத்தில் உன்னுடைய நடிப்பை பார்த்து மிகவும் ரசித்தேன். உன்னுடைய படிப்பு மற்றும் நடிப்புக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் அருண் விஜய் மகன் ஆர்னவ் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிய அருண் விஜய் இதற்கு அருண் விஜய், வாழ்த்துகளுக்கு நன்றி பிரதர். அர்னவுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு மகிழ்ச்சி. இதனை ஆர்னவிடம் பகிர்கிறேன் என்று பதில் பதிவிட்டுள்ளார். அருண் விஜயின் மகன் அர்னவ்விற்கு திரைத்துரையை சார்ந்த பல்வேறு நபர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இருவரது இந்த செயலை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.