தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீபாவளிக்கு “பிரின்ஸ்”; பீஸ்ட் பாணியில் வெளியான ப்ரோமோ - tamil cinema

சிவகார்த்திகேயன் நடிக்கும் “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”
தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”

By

Published : Jun 21, 2022, 11:50 AM IST

சிவகார்த்திகேயன், புதுமுக நடிகை மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், உள்ளிட்டோர் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ப்ரோமோஷன் வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் அனுதீப் கேவி இத்திரைப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

“பிரின்ஸ்” இப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படமாகும். கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படஙகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விரைவில் நல்ல செய்தி: விஜய் - அஜித் கூட்டணி?

ABOUT THE AUTHOR

...view details