சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை ரசிக்காதா ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் பாரம்பரியப் பண்டிகை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆகும். இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக இப்பண்டிகை தமிழ் மாதமான தை முதல்நாள் கொண்டாப்படுகிறது.
இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 15) தமிழ் மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சினிமாவில் உயர்ந்து வரும் உச்ச நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தப் பதிவில், 'உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ! பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்' என நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தனுஷின் வாத்தி 2-வது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!