தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அயலான் எப்படி இருக்கு? சிவகார்த்திகேயனின் அயலான் ட்விட்டர் விமர்சனம் இதோ! - science fiction movie

ayalaan review in tamil: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியனை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள அயலான் திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது என ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ayalaan movie review in tamil
அயலான் எப்படி இருக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:13 PM IST

சென்னை:ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பீர்த்தி சிங், கருணாகரன், பானுப்பிரியா, யோகி பாபு, கோதண்டம் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. இப்படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

ஏலியனை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “அயலான் சிறந்த ஏலியன் அறிவியல் புனைவு கதைகொண்ட பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஏலியனுடன் சேர்ந்து படத்தையும் தனது தோளில் தாங்கியுள்ளார். காமெடியும் சண்டைக் காட்சிகளும் முக்கிய அம்சங்களாக உள்ளன. அனைத்து துணை கதாபாத்திரங்களும் நன்றாக செய்துள்ளனர். ஏஆர் ரஹ்மானின் இசை நன்றாக உள்ளது.

இயக்குநர் ரவிக்குமார் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும் பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார். குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், முதல் பாதி காமெடி மற்றும் எமோஷனலாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருந்தாலும் ஆக்ஷன் மோடுக்கு மாறியுள்ளதாக அருண் பாரதி என்பவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியனுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும் சிஜி நன்றாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வில்லன் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் நன்றாக வடிவமைத்திருக்கலாம் என்றும் கிளைமாக்ஸ் நன்றாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆடியன்ஸும் ரசிக்கும் வகையில் இயக்குநர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கியுள்ளார் என்றும் சினிமா விமர்சகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார். குட்டி குட்டி ஐடியாக்கள் உடன் படத்தை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பொங்கல் அயலான் பொங்கல் தான் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மே 9-இல் வெளியாகிறது 'கல்கி 2898-AD'.. கமல் - பிரபாஸ் கூட்டணிக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு கோடை விருந்து!

ABOUT THE AUTHOR

...view details