துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றபடம் 'சீதா ராமம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார்.