தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி செந்தில் - கவுண்டமணி

மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் "லைசென்ஸ்" திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி
திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி

By

Published : Nov 9, 2022, 9:20 PM IST

நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கும் படம் "லைசென்ஸ்". இதில், மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் இந்த லைசென்ஸ் படம் மூலம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். ராஜலட்சுமி செந்தில், திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக "என்ன மச்சான்" மற்றும் புஷ்பா படத்தில் பாடிய பாடல்களை சொல்லலாம்.

தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக லைசென்ஸ் படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி

இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரெட் ஜெயன்ட் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - கே.பாக்யராஜ்

ABOUT THE AUTHOR

...view details