விரைவில் வெளிவரவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்பு, “நான் எப்போதும் மேடை ஏறியதும் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பேன். (அப்போது கமலைப் பார்த்து ஆண்டவரே வணக்கம் என்றார்). அப்பாவைப் போல் சினிமாவில் எனது கமல் தான் குருநாதர்.
நான் ஒரு சில இயக்குநர் உடன் தான் பேசுவேன். அதில் லோகேஷ் ஒருவர். இப்படம் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும். இவ்வளவு பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு படம் இயக்குவது சாதாரணமல்ல. மற்றவர்கிட்ட இருந்து கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளவர், விஜய் சேதுபதி. மலையாளத்திற்கு ஃபகத் ஃபாசில் என்றால் தமிழுக்கு விஜய் சேதுபதி. அனிருத்திடம் அதிக உழைப்பு உள்ளது.