தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிலம்பரசன் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் வரலாற்று திரைப்படம்!! - தேசிங்கு பெரியசாமி

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நடிகர் சிலம்பரசனின் 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 10, 2023, 10:24 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்‌. ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது.

இந்நிலையில் சிலம்பரசனின் அடுத்த பட இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது. சமீபத்திய நேர்காணலில் பேசிய சிம்பு , நான் தற்போது நடிப்பு பசியில் இருக்கிறேன், அதற்கு தகுந்த மாதிரி கதைகள் இருந்தால் நடிக்க தயார் என்றும், நானே கூட இயக்க முடிவு செய்துள்ளேன் என்றும் பேசியிருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் தான் நான் மன்மதன் படத்தை இயக்கினேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். தேசிங்கு பெரியசாமி கடந்த 2020ம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியிருந்தார். துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. காதல், க்ரைம் த்ரில்லர் படமாக உருவான இப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இப்படம் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டினார்‌. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் வரவில்லை. ரஜினிகாந்தும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருந்த கதையில் தான் சிம்பு நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை வரலாறு சம்பந்தப்பட்டது என கூறப்படுகிறது

சிம்புவின் 48வது படமாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் உருவாகிறது. இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கனவு நனவானது என்று பதிவிட்டுள்ளார். மேலும் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 56வது படமாக சிம்பு நடிக்கும் திரைப்படம் உருவாகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: PS-2 Update: சுட சுட வெளியான பொன்னியின் செல்வன் அப்டேட்! என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details