ஐதராபாத்:தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்று சைமா (SIIMA) விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழா நடைபெற்று அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என சினிமா துறையின் அனைத்து பிரிவின் அடிப்படையில் விருது வழங்கப்படும். அதைத்தொடர்ந்து 11 ஆவது SIIMA விருது வழங்கும் விழா துபாயில் நேற்றும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ், மலையாளம் திரைபடங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
'லவ் டுடே' பிரதீப்:கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், கடந்த ஆண்டு லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உலக அளவில் கொண்டாடப்பட்டார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சிறந்த அறிமுக நடிகர் விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை லவ் டுடே படத்திற்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது
விருதுகளை தட்டிச் சென்ற 'விக்ரம்': சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம் படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் வென்றார். இதைத்தொடர்ந்து சிறந்த பின்னணி பாடகருக்கான விருதையும் விக்ரம் படத்தில் வரும் பத்தல் பத்தல பாட்டிற்கு கமல்ஹாசன் தட்டி சென்றுள்ளார். இந்தாண்டு நடிகர் கமல்ஹாசன் இரண்டு சைமா விருதுகளை வென்றுள்ளார்.
விகரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் அதனை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த நடிகை வசந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.