ஜெய்சால்மர்: பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று(பிப்.6) நடக்க இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாராவின் குடும்பத்தினர் கடந்த 4ஆம் தேதியே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மருக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, ஜெய்சால்மர் அரண்மனையில் இன்று(பிப்.7) திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.