சென்னை: நடிகர் சித்தார்த், தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வந்த நடிகர். ‘ஜில் ஜங் ஜக்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜிகர்தண்டா’ போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அண்மையில், சித்தார்த்தின் மார்க்கெட் திரையுலகில் சற்று சரிந்துள்ளது.
கடைசியாக வெளியான எந்தத் திரைப்படமும் அவருக்கு பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் அடுத்த திரைப்படத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளார்.