ஜெய்சால்மர்:பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி, இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இன்று(பிப்.6) நடைபெற இருந்தது. ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமக்களின் குடும்பத்தினர் கடந்த 4ஆம் தேதியே ஜெய்சால்மர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.