தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விருதுகளைக் குவித்த ‘கட்டில்’ திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்! - latest tamil news

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைக் குவித்துள்ள 'கட்டில்' திரைப்படத்திற்காக பாடகர் சித்ஶ்ரீராம் நான்கு மொழிகளில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கட்டில் திரைப்படத்திற்காக நான்கு மொழிகளில் பாடிய  சித்ஶ்ரீராம்
கட்டில் திரைப்படத்திற்காக நான்கு மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்

By

Published : Dec 2, 2022, 10:45 PM IST

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்னும் தமிழ்த் திரைப்படத்திற்காக மலையாளம் -கட்டில், தெலுங்கு-பந்திரிமஞ்ஞம், கன்னடம்-மஞ்சா ஆகிய நான்கு மொழிகளில் ஶ்ரீகாந்த் தேவா இசையில் பாடியுள்ளார். கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், கட்டில். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.

கட்டில் திரைப்படத்திற்காக நான்கு மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை பாடகர் சித்ஶ்ரீராம் நான்கு மொழிகளில் பாடியுள்ளார். இது பற்றிய அனுபவத்தை வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து “மிகவும் உணர்வுமிக்க பாடல்களாக நான்கு மொழிகளிலும் அமைந்துள்ளது. நான் மிகவும் நேசித்து மிகுந்த ஈடுபாடு கொண்டு இதில் பாடியுள்ளேன். படமும் பாடலும் நான்கு மொழிகளிலும் வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க:"வாரிசு" செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details