சென்னை: தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தில் சங்கராந்தி விழா விடுமுறை தினத்தில் வெளியாக உள்ளது. இவ்வாறு இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ஸ்ருதிஹாசன், அவரது ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.