தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உறியடி நாயகன் விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு! - uriyadi vijaykumar

நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

'உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
'உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

By

Published : Jul 2, 2022, 9:24 PM IST

சென்னை: ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய பெயரிடப்படாத ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். இந்த படத்தில் 'உறியடி' படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்து இயக்கிய விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்குமார் நடித்த 'உறியடி 2' படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், 'சூரரைப் போற்று' படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:”ரம்பம் பம் ஆரம்பம்”... சுந்தர்.சி - யுவன் கூட்டணியில் வெளியான ரீமிக்ஸ் பாடல்

ABOUT THE AUTHOR

...view details