தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் சிம்ஹா நடித்த தடை உடை படத்தின் அப்டேட் - Actress Rohini

நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான தடை உடை படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 15, 2022, 3:59 PM IST

சென்னை: சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப்பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இச்சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.

சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது. இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக்குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து இன்று (ஆக.15) கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏற்றினார் இளையராஜா

ABOUT THE AUTHOR

...view details