சென்னை:தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, சமீபம காலமாக ஆக்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக ஃபிட்னஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்துகிறார். இதற்கு சான்று ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியது தான். அதோடு யசோதா படத்திலும் தனது ஆக்ஷனை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது ரூஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இதனை சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே இயக்க உள்ளனர். சிட்டாடெல் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் மிரளவைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், அதற்காக வெளிநாட்டு சண்டை பயிற்சி கலைஞர்களுடன் இணைந்து சமந்தா ஸ்டண்ட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.