தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வாரணாசியில் பிரபல நடிகை தற்கொலை.. படப்பிடிப்பில் விபரீதம்.. கடைசி வீடியோ வைரல்.. - போஜ்புரி நடிகை தற்கொலை

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே வாரணாசியில் உள்ள ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.

வாரணாசியில் நடிகை தற்கொலை
வாரணாசியில் நடிகை தற்கொலை

By

Published : Mar 26, 2023, 3:44 PM IST

Updated : Mar 26, 2023, 7:19 PM IST

வாரணாசி:உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே அங்குள்ள ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 25. இதுகுறித்து வாரணாசி போலீசார் தரப்பில், நடிகை அகன்ஷா துபே தான் நடித்து வந்த புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு உடன் வாரணாசிக்கு சென்றிருந்தார்.

இங்குள்ள சாரநாத் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார். நேற்றிரவு வழக்கம்போல படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். இன்று (மார்ச் 26) காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டி அழைத்துள்ளனர்.

இருப்பினும், கதவு திறக்கப்படாததால் மாற்று சாவியை வைத்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். முதல்கட்ட விசாரணையில் நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை; அரசியல் என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளோம் - இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்

இவர் தங்கியிருந்த அறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட விசாரணையில் முழு விவரம் தெரிவிக்கப்படும். இதனிடையே நடிகை அகன்ஷா துபேவின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. படக்குழுவில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

நடிகை அகன்ஷா துபே நேற்றிரவு தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், நீல நிற ஜீன்ஸுடன் கருப்பு நிற க்ராப் டாப் அணிந்து, கண்ணாடி முன் நடனமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. போஜ்புரி திரைப்படத் துறையில் சிறந்த மாடலாகவும், நடிகையாகவும் இருந்த அகன்க்ஷா, சமர் சிங், கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உடன் நடித்துள்ளார்.

அகன்ஷா அக்டோபர் 21, 1997ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் பிறந்தவர். தனது சிறு வயது முதலே நடனம், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வகையில், தனது நடனம் மற்றும் நடிப்பு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர். ஆரம்ப காலத்தில் TikTok, Instagram மூலம் பிரபலமாகி அதன் பின் மாடலாக மாறினார். இதையடுத்து நடிகையாக உருவெடுத்தார். வளர்ந்து வரும் காலகட்டத்தில் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு அவரது ரசிகர்களையும், போஜ்புரி திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க:கோமா நிலைக்கு சென்ற பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ?

Last Updated : Mar 26, 2023, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details