தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஒவ்வொரு ரசிகர் மன்றத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன்" - ஜவான் வெற்றியால் ஷாருக்கான் நெகிழ்ச்சி!! - jawaan box office

Jawaan Release: ஜவான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஷாருக்கான் தனது எக்ஸ்(X) பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Sep 7, 2023, 7:57 PM IST

ஹைதராபாத்: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் இந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அட்லி திரைப்படம் இயக்குகிறார். அது மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க அட்லி வழிவகை செய்துள்ளார். குறிப்பாகப் பாலிவுட் ரசிகர்களுக்கு அட்லியின் திரைக்கதை ஸ்டைல் புதிதாக இருக்கும். இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜவான் படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை வந்த ஜவான் படத்தின் விமர்சனத்தின் படி, அரசியல் மற்றும் வலுவான மனித உணர்ச்சிகளுடன் சண்டை காட்சிகள் இருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என கூறுகின்றனர். மேலும் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் இப்படம் பதான் படத்தின் வசூலை முறியடிக்கும் என கூறுகின்றனர்.

படம் வெளியாகும் முன்பே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என வினியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். ஜவான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு கலைஞர்கள் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ஜவான் பட வரவேற்புக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ”ஒவ்வொரு ரசிகர் மன்றத்துக்கும் நேரில் சென்று நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த அளவு வரவேற்பு அளித்த ரசிகர்களை மீண்டும் மகிழ்விப்பேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:Jawan : ஜவான் எப்படி இருக்கு? நான்கு ஆண்டுகளுக்கு பின் சம்பவம் செய்யும் அட்லி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details