ஹைதராபாத்:ஷாகித் கபூர் மற்றும் கிரிதி சனோன் நடித்துள்ள 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' (Impossible Love Story) திரைப்படம் சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ள 'மெட்ரோ இன் டினோ' படத்துடன் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' திரைப்படம் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், 'மெட்ரோ இன் டினோ' (Metro In Dino) திரைப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த திங்களன்று, 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தது. இந்த படத்தை அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் ஆகியோர் இயக்கியுள்ளனர். 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படத்தை மட்டாக் ஃபிலிம் ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் கீழ் தினேஷ் விஜன், ஜோதி தேஷ்பாண்டே, லக்ஷ்மண் உடேகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஷாகித் கபூர் கடைசியாக கடந்தாண்டு, தெலுங்கில் நடிகர் நானி நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'ஜெர்ஸி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். கடைசியாக அமேசான் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா ஆகியோருடன் இணைந்து 'ஃபர்ஸி' வெப் சீரியஸில் நடித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்துள்ள கிரிதி சனோன் நடித்து தற்போது ஆதிபுரூஷ் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.