தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Jawan booking: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஜவான் டிக்கெட்டுகள்! - ஜவான் டிக்கெட்

Sharuk Khan Jawan Movie : செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் 'ஜவான்' (jawan) திரைப்படத்தின் முதல் ஷோக்கான முன்பதிவு துவங்கிய 15 நிமித்தில் விற்றுத் தீர்ந்தது சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான கவனத்தை ஈர்த்து உள்ளது.

Jawan
ஜவான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:53 AM IST

ஐதராபாத்:தமிழில் ராஜா ராணி, தெறி, பிகில் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. தற்போது ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட செலவில் 'ஜவான்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து உள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான 'ஜிந்தா பந்தா' பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் ஜவான் திரைப்படம் முதலில், ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத காரணத்தால், படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என தேதி மாற்றி அமைக்கப்பட்டது. ஷாருக்கானின் முந்தைய படமான 'பதான்' வெளியாகி அதிக வசூலைக் குவித்தது. அதே போல இந்த படமும் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்திற்கான முதல் நாள் முன்பதிவு 2 வாரங்களுக்கு முன்னரே துவங்கியது. அதைத் தொடர்ந்து, புக்கிங் வெளியான 15 நிமிடத்திலேயே முதல் நாள் காட்சிக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்கள் மொத்தமும் விற்றுத் தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் புக்கிங் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக கூறப்படும் நிகழ்வு, ஜவான் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் வியக்க வைக்கும் வகையில், 1 கோடியே 2 லட்ச ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா ஆகிய அயல் நாடுகளிலும் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, சில இடங்களில் ரசிகர்களின் காட்சிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரத்து 100 ரூபாய் வரை விற்கப்பட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் சில இடங்களில் மட்டுமே படத்திற்கான முன்பதிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Jailer Box Office: ஜெயிலர் படத்தின் 18 நாள் வசூல் எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details