ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் அவரது முந்தைய படமான பதான் படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வருவாயை முறியடித்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம், உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில், 1055 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2023ஆம் ஆணில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பட்டத்தைப் பெற்றது.
ஜவான் திரைப்படம் இந்தியாவில் 705 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 350 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. பதானின் வாழ்நாள் உலகளாவிய வருவாயான 1055 கோடி ரூபாயை ஜவான் படம் வெறும் 23 நாள்களிலே வசூல் செய்தது. இப்படம் 1968 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த தங்கல் படத்திற்கு அடுத்தபடியாக ஐந்தாவது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என பட்டத்தை பெற்றுள்ளது. மேலும், இப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹிந்தித் திரைப்படமாக உள்ளது.
உள்நாட்டில், ஜவான் முதல் 23 நாள்களில் 587 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக விளங்குகிறது.