கடந்த ஆண்டு வெளியான இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் நடித்த சிறு கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக நடிகர் சபீர் நடித்த ’டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரம் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
வில்லனாகும் 'Dancing rose'..! ': பா.இரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்! - சபீர்
இயக்குநர் பா.இரஞ்சித் அடுத்து எடுக்கவிருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் ’சார்பட்டா பரம்பரை’ புகழ் சபீர் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![வில்லனாகும் 'Dancing rose'..! ': பா.இரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்! வில்லனாகும் 'Dancing rose'..! ': பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அப்டேட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15444367-thumbnail-3x2-dancingrose.jpg)
வில்லனாகும் 'Dancing rose'..! ': பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அப்டேட்
இந்நிலையில், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித் அடுத்தபடியாக எடுத்து வரும், ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ திரைப்படத்தில் சபீர் வில்லனாக நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகர்களாக நடிகர் கலையரசனும், காளிதாஸ் ஜெயராமும் ஏற்கெனவே நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்தத் தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாடகர் கேகே மரணத்தில் சந்தேகம் - போலீஸார் வழக்குப்பதிவு