தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜென்டில்மேன் 2 ஹீரோவாக சேதன் - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு! - ஹீரோவாக சேதன்

ஜென்டில்மேன் 2 படத்தின் கதாநாயகனை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன் - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு!
ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன் - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு!

By

Published : Oct 6, 2022, 10:55 PM IST

சென்னை: ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரமாண்ட படம், ஜென்டில்மேன் 2. இப்படத்தின் ஹீரோ யார் என்பது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டது.

தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார். சேதன் ஹீரோவாக நடித்த, நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், விளம்பரப் பட இயக்குநரான லீலா ராணி இயக்கத்தில் ஒரு பான் இந்தியா படம், மது மதூஸ் இயக்கத்தில் நடித்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படம் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளன.

காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் இவர் பன்னிரெண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெயர் சூட்டப்படாத வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

"குஞ்சுமோன் மாதிரி ஒரு லெஜன்ட் தயாரிப்பாளர் படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் தமிழ் சினிமாவின் முத்திரையை மாற்றி அமைத்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரும்மகிழ்ச்சி.

நான் குஞ்சு மோன் சாரை சந்தித்த வேளையில், நடித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பிற்காக பெரிய தாடி வளர்த்து இருந்தேன். ஆனால், தாடி ட்ரிம் செய்து ஆடிஷனுக்கு வரச்சொன்னார். வேறொன்றும் சிந்திக்காமல், வாய்ப்பு உறுதியாகாத நிலையிலும் அவர் சொல்லை மதித்து தாடியை ட்ரிம் செய்தேன்.

ஜென்டில்மேன் 2 ஹீரோவாக சேதன் - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு!

இன்று நான் தான் ஹீரோ என்ற அறிவிப்பை பார்த்து மெய் சிலிர்த்துப்போனேன். இந்த படத்துக்காக தாடி மட்டுமல்ல; மொட்டை அடிக்கச்சொன்னால்கூட அதையும் செய்வேன்" என்றார் நெகிழ்ச்சியுடன் சேதன்.

நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் ஜென்டில்மேன் 2 ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்திய சினிமாவில் பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் இந்த மெகா படத்தில் பணியாற்ற உள்ளனர். மரகதமணி (எ) கீரவாணி இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு அஜயன் வின்சென்ட், கலை இயக்குநர்களாக தோட்டா தரணியும் அவரது மகள் ரோகிணி தோட்டா தரணியும் பணியாற்றுகிறார்கள்.

இதையும் படிங்க:நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட 'எமகாதகி' ஃபர்ஸ்ட் லுக்

ABOUT THE AUTHOR

...view details