ஏலியன் பிக்சர்ஸ் தயாரித்து இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செஞ்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர் பாக்யராஜ், நடிகை கேசன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குநர் கணேஷ் சந்திரசேகர், "இதற்காக 2 வருடமாக அழைந்தோம். பல இடங்களுக்கு பயணம் செய்து, காடுகள், மலைப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தினோம். செஞ்சி, புதுச்சேரி பகுதிகளில் ஷூட்டிங் எடுத்ததாகவும், பூமிக்காக போராட வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
’அரசியல்வாதிகளின் சமாதியெல்லாம் காஸ்ட்லியாகிவிட்டது..!’ - பேரரசு நம்மால் முடிந்த வரை சமூகத்திற்கான சில மாறுதல்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முயற்சி தான் இது. என் உழைப்பில், முயற்சியில் எடுத்த படம் இது" என கூறினார்.
’வைரல் பேச்சாளர்’ கே.ராஜன்..!:மேலும் பேசிய இயக்குநர் பேரரசு, “பொதுவாக பல வகையான இயக்குநர்கள் உண்டு. ஆனால் சாதனையாளர் இயக்குநர்கள் என்றால் சிலர் மட்டுமே. அவர்களில் ஒருவர் தான் ’பாக்யராஜ்’. இவரது வரலாறு எப்போதும் பேசப்படும். அவருடன் உதவியாளராக பணியாற்ற நினைத்தேன் முடியவில்லை.
வைரல் பேச்சாளர் - கே.ராஜன் , அவர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே அவரது பேச்சு யூடியூபில் வந்து விடுகிறது. பல இயக்குநர்களுக்கு மத்தியில் கணேஷ் வித்தியாசமானவர். ஆனால் பாக்யராஜ் பல கஷ்டங்களைத் தாண்டி தான் இயக்குநராகியுள்ளார்.
செஞ்சி - நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரெஜிஸ்டர் பண்ணிய டைட்டில். ஆனால் நீங்கள் கொடுத்து விட்டீர்கள். பரவாயில்லை , செஞ்சி - ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர். ஒவ்வொரு ஊரிலும் நிறைய சமாதிகள் இருக்கும். தற்போது அரசியல்வாதிகளுக்கு சமாதி காஸ்ட்லியாகி விட்டது” எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “தற்போது சினிமாவின் நிலை மோசமாக உள்ளது. பேப்பரை படித்தால் காமெடியாக உள்ளது. வெற்றிகரமாக மூன்றாவது நாள் என்று விளம்பரம் செய்கின்றனர். 100 நாள், 150 நாட்கள் என்று இருந்த காலம் போய் தற்போது இப்படி இருக்கிறது.
விரைவில் மூன்றாவது காட்சி என்று வந்து விடுமோ என்று வருத்தமாக உள்ளது. ஆயினும் ஒரு விதத்தில் இது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் படங்கள் இந்தியா மட்டும் அல்லாமல் எல்லா ஊர்களுக்கும் சென்று நல்ல மரியாதையை சம்பாதித்து வருகிறது.
காமராஜர், அண்ணா, கருணாநிதி இவர்கள் பெயரை சொல்லும் போது அவர்கள் இன்னும் இருந்து கொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் ராஜன் ஆரம்ப காலத்தில் 560 ரூபாய் சம்பளம் வாங்கினார். பிறகு பல படங்கள் எடுத்து லாபம், நஷ்டம் என எல்லாத்தையும் கடந்து கடைசியாக 15 கோடி வட்டிக்கு விட்டார்.
சினிமாவில் பணம் வராமல் 560 ரூபாயில் இருந்து 15 கோடி வந்தது. ஆசிரியராக இருந்தார். மற்ற தொழில்கள் ஏதேனும் பார்த்திருக்கலாம். வசூல் ஆகவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் எப்படியும் வசூல் பண்ணிவிடுகிறீர்கள்” என்று கலாய்த்து பேசினார்.
மேலும், “கள்ள நோட்டு என்பது சிலர் தான் அடிக்கிறார்கள். ஆனால் நல்ல நோட்டு நல்ல மனிதர்களையும் மாற்றி விடுகிறது. சினிமா என்பது பொது அறிவு தான். தைரியமும் பொது அறிவும் சினிமாவிற்கு முக்கியம். எக்ஸ்பீரிமென்ட் என்று சொன்னாலே அது தமிழில் தான் பண்ண முடியும்.
பலர் அதை செய்து வெற்றி பெற்றுள்ளனர். என்னை பொறுத்தவரை சினிமா என்பது 75 சதவீதம் பொது அறிவு மற்றும் 25 சதவீதம் தொழில்நுட்பம் என்பது தான். புதிதாக எது வந்தாலும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், “ மலேசியாவில் இருந்து வந்த கமல்நாத் நிதி உதவி செய்துள்ளார். ஏழைகளுக்கு முடிந்ததை செய்யுங்கள். அவன் உன்னை கடவுளாக்குவான். அதை தொடர்ந்து திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் கொண்டு கொட்டுவதை விட ஏழைகளுக்கு உதவுங்கள்.
மனிதனே தர்மம் செய். கோடி கோடியாக வாங்குபவர்கள்.. நடிகர்களை மட்டுமல்ல. பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை கேட்கிறேன். ஏழைகளுக்கு உதவுங்கள். புரட்சி தலைவர் எம்ஜிஆர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் ஊர்வலத்துக்கு வந்தது மக்கள் வெள்ளம்.
அளவுக்கு மீறி சேர்க்கும் பணம் காகித குப்பைகள். அன்றைக்கு எனக்கு 556 ரூபாய் தான் சம்பளம். என் நண்பரால் தான் ’பிரம்மச்சாரி’ படம் எடுத்து நஷ்டமடைந்தேன். பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு சில படங்களை எடுத்தேன். மொத்தமாக இழந்தது 4.5 கோடி, பிரபு தேவா - மீனா வைத்து எடுத்த டபுள்ஸ் படம் 75 லட்சம் நஷ்டம். பார்த்திபனை வைத்து நினைக்காத நாளில்லை படத்தில் 1.25 கோடி நஷ்டம்.
விஜயகாந்த் போல் விஷால் வர வேண்டும்:பிறகு தான் யோசித்து 15 கோடி ரூபாய் வட்டிக்கு விட்டுள்ளேன். ஒரு பயலும் திரும்பி தர மாட்டேங்குறான். திட்டமிடல் இல்லாததால் எங்கள் ஆட்கள் பலர் படம் எடுத்து விட்டு பிறகு ரோட்டுக்கு போகிறார்கள். இன்று சினிமாவை வாழ வைப்பது எங்களை போன்ற சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் தான் .
தொடர்ந்து பேசிய அவர், லத்தி படத்தில் விஷாலை பாராட்டினேன். 2 வருடமாக நடிகர் சங்க வேலையை சரியாக செய்கிறார். இளைஞனே நீ விஜயகாந்த் போல வா என்று பாராட்டினேன். அதையும் சில யூடியூபில் கேள்வியாக கேட்டிருக்கின்றனர், விஷால் இன்னும் 2 வருடங்களில் நன்றாக வருவார்.
பணமும் தேவை. பணத்திற்காக பலரை கெடுக்காமல், பலருக்கு கொடுத்து உதவுங்கள். தர்மம் செய்வோம். ஏழைகளை காப்போம் என்றும்,காமராஜ் பள்ளியில் பலருக்கு உதவி செய்து வருகிறேன். விஷாலும் ’லத்தி’ பட நிகழ்ச்சியில் 5 குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்தார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: திரையரங்குகளில் வெளியானது 'தி லெஜண்ட்'! - காலை 4 மணி காட்சி ஹவுஸ்புல்...