தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பழம்பெரும் நடிகர் பாலையா காலமானார்! - Balayya

பழம்பெரும் தெலுங்கு நடிகர் பாலையா தனது 92ஆவது வயதில் காலமானார். இவர் தனது பிறந்த நாளிலே மரணித்துள்ளார்.

Balayya
Balayya

By

Published : Apr 9, 2022, 2:06 PM IST

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடாவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தவர் பாலையா. பன்முக கலைஞரான பாலையா நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதாசிரியர் என திகழ்ந்தவர் ஆவார். இவரின் மரணத்தை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

பாலையா, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வைகுண்டபுரம் (தற்போது அமராவதியில் உள்ளது) சப்பவாடு கிராமத்தில் 1930ஆம் ஆண்டு ஏப்.9ஆம் தேதி குருவையா-அன்னபூர்ணிமா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். 1952இல் மெக்கானிக்கல் பொறியியல் படித்து முடித்த இவர், 1957இல் மெட்ராஸ் மற்றும் காக்கிநாடா பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்தார்.

பழம்பெரும் நடிகர் பாலையா

இந்த நிலையில், மெட்ராஸ் கிண்டி கல்லூரியில் நாடகங்கள் பயின்றார். தொடர்ந்து எட்டுகு பை எட்டு (Ettuku Pai Ettu movie) என்ற படத்தில் 1958ஆம் ஆண்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின்னர் பாக்ய தேவதா, கும்கும ரேகா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

புகைலாஷ் படத்தில் பாலையா சிவன் வேடத்தில் நடித்தார். இது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுகொடுத்தது. இது மட்டுமின்றி பல்வேறு படங்களை பாலையா தயாரித்தும் உள்ளார். பாலையாவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு

ABOUT THE AUTHOR

...view details