சென்னை: நடிகர் மாதவன் நடித்து, இயக்கிய ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைக் கண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ராக்கெட்ரி: நம்பி விளைவு தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு” என்று பதிவிட்டுள்ளார்.
இதை ரீட்வீட் செய்த மாதவன், “எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ராக்கெட்ரியின் ஒட்டுமொத்த குழுவும் மிகப் பெரிய விருதைப் பெற்றுள்ளது போல் உணர்கிறேன். என் மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை, ஆனால் என் இதயம் நன்றியுடனும் பணிவுடனும் நிரம்புகிறது. நீண்ட இதயப்பூர்வமான பதிவுக்கு நன்றி அண்ணன் சீமான்” என்று பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.