சென்னை:சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் 20க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் பல உச்ச நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படங்களுக்கு மத்தியில் தற்போது வெற்றி கூட்டணியான நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோர் இணையும் அடுத்த படத்தை தயாரிப்பதாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த கூட்டணி முன்னதாக ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் மூலம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. குறிப்பாக ராட்சசன் திரைப்படம் இந்திய அளவில் ரசிக்கப்பட்டது.