நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், மற்றும் திரையுலகத்தினர் வேண்டி வாழ்த்தி வருகின்றனர்.
’என் அன்பு நண்பன் ’விஜி’ பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்..!’ - சத்யராஜ் - சத்யராஜ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தி நடிகர் சத்யராஜ் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
’என் அன்பு நண்பன் ’விஜி’ பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்..!’ - சத்யராஜ்
அந்த வகையில், இன்று(ஜூன் 22) நடிகர் சத்யராஜ் விரைவில் நடிகர் விஜயகாந்த் குணமடைய வேண்டுமென வாழ்த்தி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ எல்லோராலும் கேப்டன் என அழைக்கப்படும் என் இனிய நண்பன் விஜி பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்று மனமார வாழ்த்துகிறேன்” எனப் பேசியுள்ளார்.