தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"சதுரங்க வேட்டை" நட்டியின் புதிய படம் தொடக்கம் - நட்டியின் புதிய படம்

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான 'கூராய்வு', சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் தொடங்கியது.

சதுரங்க வேட்டை நட்டியின் புதிய படம் தொடக்கம்
சதுரங்க வேட்டை நட்டியின் புதிய படம் தொடக்கம்

By

Published : Jun 18, 2022, 4:28 PM IST

சென்னை: ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார்.

பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தை பற்றி பேசிய ஆண்டனி சாமி, "2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது,

உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இந்த திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது, இது நிச்சயமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்," என்று அவர் கூறினார்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளன. களஞ்சியம் இயக்கும் 'முந்திரிக்காடு' புகழ் சுபபிரியாமலர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க:'சீக்கிரம் அடுத்த கதை எழுது என கமல் சார் சொன்னார்' - லோகேஷ் கனகராஜ்

ABOUT THE AUTHOR

...view details