தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விமர்சகர்கள் பாராட்டும் சசிகுமாரின் அயோத்தி - சென்னை

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

விமர்சகர்கள் பாராட்டும் சசிகுமாரின் அயோத்தி
விமர்சகர்கள் பாராட்டும் சசிகுமாரின் அயோத்தி

By

Published : Mar 4, 2023, 7:47 PM IST

விமர்சகர்கள் பாராட்டும் சசிகுமாரின் அயோத்தி

சென்னை:தமிழ் சினிமாவில் இயக்குநர்-நடிகராக அறியப்படுபவர் சசிகுமார். இவரது சமீபத்திய படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனால் ஒரு வெற்றிப் படத்திற்காக போராடி வருகிறார். இந்த நிலையில் அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் அயோத்தி படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது.

எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, ப்ரியா அஸ்ராணி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக இப்படம் உருவாகியுள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள் தான் இந்த படத்தின் கரு.

இதுவரை இல்லாத புதிய திரைக்கதை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சசிகுமார் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை இப்படம் நிச்சயம் மாற்றும். அவருக்கென்று ஜோடி இல்லை. பாடல் இல்லை கதையின் நாயகனாக மட்டுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படம் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு படத்தை பார்த்த அனுபவம் கிடைத்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கத்தை பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் இப்படம் தனியிடம் பிடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து ஒருவர் உயிரிழந்தால் அந்த உடலை கொண்டு செல்ல எத்தனை பிரச்னைகள் இருக்கின்றன என்பதை இப்படத்தில் காட்டியுள்ளனர். ஊர், பெயர் தெரியாத ஒரு குடும்பத்திற்கு உதவுகின்ற‌ வேடத்தில் சசிகுமார் நடித்துள்ளார். மனிதம் மட்டுமே இவ்வுலகில் நிலையானது என்ற கருத்தும் இப்படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளதால், சினிமா பாணி போன்ற காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டனர். மனித நேயம், மத நல்லிணக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் குறித்து சசிகுமார் கூறும்போது, “அயோத்தி என்றதும் இது சர்ச்சையான படமா என்று கேட்கின்றனர். இது மதம் பற்றிய படமல்ல மனிதம் பேசும் படம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்தவித சர்ச்சைகளும் இல்லாத படம் இது. எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி வசூல்.. அதிரடியில் தனுஷின் வாத்தி..

ABOUT THE AUTHOR

...view details