தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மாஸ் லுக்கில் லெஜண்ட் சரவணன்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்! - சினிமா செய்தி

புதிய மாஸ் லுக்கிற்கு மாறிய சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Legend Saravana switched to a new mass look
மாஸ் லுக்குக்கு மாறிய லெஜண்ட்

By

Published : Mar 14, 2023, 2:49 PM IST

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மூலம் உலக அளவில் பல கிளைகளை திறந்த வியாபார உலகில் மிகப் பெரிய ஆளுமையாக உலா வருபவர் தி லெஜண்ட் சரவணன். கடின உழைப்பால் உயர்ந்த நிறுவனத்தின் தலைவர். இவர் ஏகப்பட்ட கிளைகளுடன் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர். இவரது கடையின் விளம்பரத்திற்கு மிகப் பிரமாண்டமாகச் செலவு செய்ததுடன் அல்லாமல் இவரே நடித்திருந்தார்.

இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் புதிய அனுபவமாக இருந்தது. இவரைத் தொடர்ந்து தான் மற்ற தொழிலதிபர்களும், தங்களுடைய கடையின் விளம்பரத்தில் தாங்களே நடிக்க ஆரம்பித்தனர். மேலும் முன்னணி நடிகைகளை தன்னுடைய கடை விளம்பரத்தில் நடிக்க வைத்து தனி கவனம் ஈர்த்தவர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையிலிருந்த அவர் கடந்த ஆண்டு அதையும் தீர்த்துக்கொண்டார் எனக் கூறலாம்.

தனது கடையின் விளம்பர படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி இருவரையும் இயக்குநராக வைத்து புதிய படத்தில் நடித்தார். உல்லாசம், விசில் போன்ற திரைப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்கள் அவர்களால், மிகப் பிரம்மாண்டமாக தி லெஜண்ட் படம் எடுக்கப்பட்டது. முதல் படத்திலேயே பாலிவுட் நடிகை ஊர்வசி ரகதுலா, ஹாரிஸ் ஜெயராஜ், வேல்ராஜ் ஒளிப்பதிவு என முன்னணி கலைஞர்கள் அப்படத்தில் பணியாற்றினர். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அப்படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்‌.

"லெஜண்ட்" (the legent) என பெயரிடப்பட்டு இருந்த அப்படம் கடந்த ஆண்டு வெளியானது. முதல் படமே முன்னணி நடிகருக்கான ஓபனிங் வசூல் செய்து சாதனை படைத்தது. அவரது நடிப்பு கிண்டலுக்கு உள்ளானாலும், சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் பெரிதும் ரசிக்கப்பட்டார். எத்தனை கிண்டலுக்கு ஆனாலும் அவரது முயற்சியை ரசிகர்கள் பாராட்டினார்கள். லெஜண்ட் திரைப்படம் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் வெளியான உடனே நம்பர் 1 இடத்தை பிடித்தது இந்த திரைப்படம்.

"கண்ணா இனி தான் என் ஆட்டத்த பாக்க போற": லெஜண்ட் சரவணன்

தற்போது காஷ்மீரில் உள்ள லெஜண்ட் சரவணன் ஒருவேளை லியோ படத்தில் நடிக்கிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் அவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்கின்றனர். புதிய கெட்டப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கிளீன் சேவ் இன்றி சிறிய தாடியுடன் மிகவும் ஸ்மார்ட்டாக அதில் காட்சியளிக்கின்றார். கோட் சூட் போட்டு கருப்பு கண்ணாடியுடன் வேற லெவல் அழகில் காணப்படுகிறார் லெஜண்ட் சரவணன். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திகைத்து போய் உள்ளனர். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அனைவரின் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 'Migrant care' செயலி.. சேலம் காவல்துறை அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details