சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்’. இந்தத் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சரவணன் அண்ணாச்சி இதுவரை எந்தவித சமூக வலைதளங்களும் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கினார். தொடங்கி மூன்றே நாட்களில் இதுவரை அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.