சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் தயாரித்துள்ள ’தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ’சரவணா சரவெடி’ என்னும் மற்றொரு தீம் பாடல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாஸ் ஹீரோக்களுக்கான தீம் சாங் பாணியில் உருவாகியுள்ள இந்தப்பாடல் பின்னணியில் ஒலிக்க அண்ணாச்சியின் அசரவைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெரும் போலும்.
’சரவணா சரவெடி’ : தி லெஜெண்ட் படத்தின் புதிய பாடல் வெளியீடு - லெஜெண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிக்கும் ’தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ‘தி லெஜெண்ட் சரவெடி’ பாடல் வெளியாகியுள்ளது.
’சரவணா சரவெடி’ : தி லெஜெண்ட் படத்தின் புதிய பாடல் வெளியீடு
இந்தப் பாடல் வரிகளை எழுதி பாடியிருப்பவர் ’மெக் விக்கி’. இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் வருகிற 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
இதையும் படிங்க: யோகி பாபுவின் ’பொம்மைநாயகி’ போஸ்டர் வெளியீடு!