மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து, "குலுகுலு" என்ற படத்தை இயக்கி வருகிறார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சந்தானத்தின் ’குலுகுலு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு - சந்தானம்
சந்தானம் நடித்துள்ள குலுகுலு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.
![நடிகர் சந்தானத்தின் ’குலுகுலு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு நடிகர் சந்தானத்தின் ’குலுகுலு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15248249-thumbnail-3x2-kulukulu.jpg)
நடிகர் சந்தானத்தின் ’குலுகுலு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
இப்படத்தில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் இசை வெளியீட்டு விழா!