சென்னை: ரத்னகுமார் இயக்கிய படம் குலுகுலு. இதில் சந்தானம், துல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் ரத்னகுமார் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்றிவர். மேயாத மான் மற்றும் ஆடை உள்ளிட்ட மாறுபட்ட படங்களை இயக்கியவர்.