தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சமந்தாவின் யசோதா பட ரீலிஸ் தேதி அறிவிப்பு - Action thriller movie

நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகியவரும் யசோதா திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatசமந்தாவின் யசோதா ரீலிஸ் தேதி அறிவிப்பு
Etv Bharatசமந்தாவின் யசோதா ரீலிஸ் தேதி அறிவிப்பு

By

Published : Oct 18, 2022, 6:52 AM IST

இந்திய அளவில் பிரபலமடைந்து வரும் டாப் நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது. இந்த வருடம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14ஆவது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், "’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது.

இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள். இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம். இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது" என கூறினார். சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் புனை கதை தான், ஆனால்! - மணிரத்னம் கூறும் நெகிழ்ச்சிக்கதை

ABOUT THE AUTHOR

...view details