நடிகை சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில், இந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ட்ரைலர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ட்ரைய்லரில் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆக்ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார்.
”சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே, இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று, பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது” என கூறியுள்ளார்.