நடிகை சமந்தா நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகவுள்ள யசோதா படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே நேற்று (அக்-29) சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாடு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், பல மாதங்களாக மயோசிடிஸ் எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். குறிப்பாக யசோதா படத்திற்கான டப்பிங் பணியின்போதும் கையில் ட்ரிப்ஸ் உடன் காணப்படும் புகைக்கப்படத்தையும் பகிர்ந்தார்.
இந்த பதிவில், "யசோதா டிரெய்லருக்கான உங்கள் வரவேற்பு அபாரமாக இருந்தது. இந்த அன்பைதான் உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்கின்ற வாழ்க்கை என் மீது விழும் முடிவில்லாத சவால்களை சமாளிக்கும் வலிமையை எனக்குத் தருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்