ஐதராபாத் :கடினமான ஆறு மாதங்கள் என்ற கேப்ஷனுடன் நடிகை சமந்தா தனது ஆதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் நடிகை சமந்தாவுக்கு குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சினிமாவை விட்டு ஒரு வருடம் விலகி இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர் முடிவு செய்து உள்ளதாகவும், இதற்காக புதிய படங்களில் அவர் எதுவும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் இஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் இறுதிவரை உருவாக்கியதாக தெரிவித்து உள்ளார். முன்னதாக மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். வெள்ளை நிற டீ சர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து, தலையில் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்திருந்த அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர்.