தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாலி தீவில் விடுமுறையை கொண்டாடும் சமந்தா... குரங்குடன் எடுத்த செல்பி வைரல்! - நடிகை சமந்தா குஷி படம் ரிலீஸ் தேதி

பாலி தீவில் குரங்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

Samantha
Samantha

By

Published : Jul 27, 2023, 4:37 PM IST

ஐதராபாத் :இந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவுக்கு சுற்றுலா சென்று உள்ள நடிகை சமந்தா, அங்கு தன் பெண் தோழி மற்றும் குரங்குடன் எடுத்துக் கொண்ட புகைப்பட்டத்தை வெளியிட்டு உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமா தவிர்த்து பாலிவுட்டிலுன் ஒரு ரவுண்டு வந்த நடிகை சமந்தா, உடல் நல பிரச்சினைகள் காரணமாக அண்மைக்காலமாக பழைய பொலிவற்று காணப்படுகிறார். பாலிவுட்டில் நடிகை சமந்தா நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப்சீரிஸ் வெற்றி பெற்று அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

இதையடுத்து, அக்‌ஷய் குமார், ஆயூஷ்மான் குரானா, வருண் தவான் என பல்வேறு முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் சமந்தாவுக்கு கிடைத்தன. இதனிடையே மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் தாக்குதலால் பாதிப்படைந்த நடிகை சமந்தா சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

அதேநேரம் அவர் எதிர்பார்த்தபடி சில படங்கள் அமையவில்லை என்றும் கூட கூறலாம். அண்மையில் அவர் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாகுந்தலம் படம் மிகப் பெரிய தோல்வியாக சமந்தாவுக்கு அமைந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்து உள்ள குஷி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான் உடன் இணைந்து நடித்துள்ள சிட்டாடல் வெப்சீரிசும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படங்களின் படப்பிடிப்புகளை முடித்த கையோடு அடுத்த ஒரு ஆண்டுக்கு எந்த படங்களிலும் சமந்தா நடிக்கப் போவதில்லை என்றும் படப்பிடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு நடிகை சமந்தா ஒய்வு எடுக்க போவதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு நடிகை சம்ந்தா சுற்றுலா சென்று உள்ளார். பாலி தீவில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே குரங்கு ஒன்றை தன் மடியில் வைத்துக் கொண்டு தோழியுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நடிகை சமந்தாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :ஆரஞ்சு உடையில் ஆளை அசத்தும் வாணி போஜன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details