தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஒரே அறையில் வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்தால்... - நாக சைதன்யா குறித்து சமந்தா! - samantha

’எங்கள் இருவரையும் ஒரு அறையில் வைத்து, கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது’ என நாக சைதன்யா குறித்து சமந்தா தெரிவித்துள்ளார்.

என்னையும் அவரையும் ஒரே அறையில் வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்தால்... - நாக சைதன்யா குறித்து சமந்தா
என்னையும் அவரையும் ஒரே அறையில் வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்தால்... - நாக சைதன்யா குறித்து சமந்தா

By

Published : Jul 22, 2022, 1:31 PM IST

இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரமாக வலம் வருபவர் சமந்தா. இந்நிலையில் 'காஃபி வித் கரண்' என்னும் என்னும் ஹிந்தி சேனலுக்கான நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில், 'வீட்டில் விஷயங்கள் கடினமாக இருந்ததால் தான் நடிப்பில் இறங்கியதாக' சமந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையில் எனக்கு வேறு வழியில்லை என்று தான் இந்தத் தொழிலுக்கு வருகிறேன், ஏனென்றால் வீட்டில் பொருளாதாரச்சூழல் கடினமாக இருந்தது. எங்களிடம் மேற்கொண்டு படிக்க அதிகப்பணம் இல்லை. ஆனால், பின்னர் இதனை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

என் தந்தை ’என்னால் கடன்களை அடைக்க முடியாது' என்று சொன்ன வார்த்தை, என் வாழ்க்கையை மாற்றியது," என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'தனது முதல் சம்பளம் வெறும் 500 ரூபாய் என்றும், பள்ளியில் படிக்கும் போது, ஒரு மாநாட்டின் போது ஒரு நாள் தொகுப்பாளினியாக வேலை செய்ததற்காக' அதைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா இடையே ஆன கசப்பான உணர்வுகள் குறித்து கேட்டபோது சமந்தா, "எங்கள் இருவரையும் ஒரு அறையில் வைத்து, கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது அந்த கசப்பான உணர்வுகள். ஆம், இப்போதைக்கு இவ்வாறு உள்ளது. ஆனால், அது எதிர்காலத்தில் எப்போதாவது மாறலாம்" எனத் தெரிவித்தார்.

சமந்தாவின் இந்தப் பேச்சு வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:68ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிப்பு - சூர்யாவுக்குப் பிறந்தநாள் பரிசு கிடைக்குமா?

ABOUT THE AUTHOR

...view details