மும்பை: டெங்குவிலிருந்து பூரண குணமடைந்த நடிகர் சல்மான் கான் நேற்று(அக்.25) நடந்த தனது மச்சான் ஆயுஷ் சர்மாவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார். அவரை பழையபடி பார்த்ததில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த வாரம் படுத்த படுக்கையில் நடிகர் சல்மான்கான் சிகிச்சையெடுத்து வந்ததால் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் அவரால் முடியவில்லை.
அவருக்குப் படிலாக இயக்குநர் கரண் ஜோஹர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸைத் தவிர்த்து, ’கிசி க பாய் கிசி கி ஜான்’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டகுபதி, ஃபர்ஹட் சாம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், நடிகர் சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் ஃபிலிம்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது.
இதையும் படிங்க: குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா