சென்னை: தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னும் பல மொழிகளிலிருந்தும் சாக்ஷி அகர்வாலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
முன்னதாக, பிக்பாஸ் மூலம் அனைவராலும் சாக்ஷி அகர்வால் அறியப்பட்டார். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாக்ஷியின் திறமை பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சாக்ஷி.